sarva vallavar saavai vaendravar

சர்வ வல்லவர் சாவை வென்றவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சர்வ வல்லவர் சாவை வென்றவர்
உயிரோடு இருக்கிறீர் இயேசுவே
சிலுவை சுமந்தவர் உயிரைக் கொடுத்தவர்
பாவம் நீங்குதே இரத்தத்தால் – 2
இனி நானில்லையே என் கிறிஸ்து எனக்குள்ளே
புது சிருஷ்டியாகவே மாறினேன்-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே
இறங்கும் இறங்கும் இன்றே
ஓ ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே
எனக்கிரங்குமே இறங்குமே இன்றே
எங்கள் சபையிலே மகிமை இறங்குதே
தரிசனம் பார்க்கிறோம் இயேசுவே
நீர் அழகில் சிறந்தவர் என்னை தெரிந்தவர்
உம்மை பாடுவேன் வாழ்விலே
உம் சத்தம் கேட்கவே உம் பாதம் நிற்கிறேன்
எனக்காய் பேசுமே இயேசுவே
உம் முகத்தை பார்க்கவே வெளிச்சம் வந்ததே
உம் சாயல் வந்ததே இயேசுவே
உள்ளம் அறிந்தவர் என் உணர்வை புரிந் தவர்
உம்மில் மகிழ்கின்றேன் இயேசுவே
நீர் அன்பு கூர்ந்தவர் அன்பில் நிறைந்தவர்
உம்மைத் தொட்டுப் பார்க்கிறேன் இயேசுவே