santhoosha seythi paril engkum – Santhosa Seithi Paaril Engum

சந்தோஷ செய்தி பாரில் எங்கும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சந்தோஷ செய்தி பாரில் எங்கும் – Santhosa Seithi Paaril Engum
1. சந்தோஷ செய்தி பாரில் எங்கும்
தாவீதின் ராஜன் பெத்லகேமிலே
நம் பாவம் நம் சாபம் நீக்க
இப்பாரில் இரட்சகர் வந்துதித்தார் -(2)
ஆஹா இதுதான் அன்பின் கிறிஸ்மஸ் ஹேய்
ஓஹோ ஒன்றாய் பாடும் கிறிஸ்மஸ் ஹேய் -(2)
2. தாலாட்டின் பாடல் வானில் கேட்க
தூதர்கள் போற்றி வாழ்த்து கூறினர்
மேய்ப்பர்கள் நற்செய்தி கேட்டு
மேசியாவை காண விரைந்தோடினர் -(2)
ஆஹா இதுதான் அன்பின் கிறிஸ்மஸ் ஹேய்
ஓஹோ ஒன்றாய் பாடும் கிறிஸ்மஸ் ஹேய் -(2)
3. வான்வெள்ளி நட்சத்திரம் கண்டு
சாஸ்திரிகள் பரிசு கொண்டு வழங்கினர்
உலகத்தின் ஒளியாக தோன்றி
விண்வேந்தன் நம்மை மீட்க பிறந்தார் -(2)
ஆஹா இதுதான் அன்பின் கிறிஸ்மஸ் ஹேய்
ஓஹோ ஒன்றாய் பாடும் கிறிஸ்மஸ் ஹேய் -(4)