samuththiram koota varrip pookalam

சமுத்திரம் கூட வற்றி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சமுத்திரம் கூட வற்றிப் போகலாம்
உந்தனின் அன்பு வற்றிப்போகுமோ -2
மலைகள் கூட விலகிப் போகலாம்
உந்தனின் கிருபை விலகிப் போகுமா -2
நீரே கர்த்தர் நீரே ராஜா
நீரே தேவன் நீரே எல்லாம்-2- சமுத்திரம்
அன்பு காட்ட மனிதர்கள் செய்கின்றதெல்லாம்
மாறி மாறி போடுகின்ற வேஷங்கள் தானே-2
நீர் ஒருவரே என்னை நேசிக்கின்றவர்
உண்மையாய் என்னை புரிந்து கொண்டவர் -2
செல்வம் வந்தபோது சேர்த்துக்கொண்டனர்
வறுமை வந்தபோது விரட்டியடித்தனர் -2- நீர் ஒருவரே
சிலுவையிலே ஜீவனை தந்ததினாலே
அன்பு என்ற வார்த்தையின் இலக்கணம் நீரே-2