1.samastha mantalaththaiyum

சமஸ்த மண்டலத்தையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.சமஸ்த மண்டலத்தையும்
படைத்த நாதனே
சமஸ்த ஜீவ ஜெந்தையும்
போஷிக்கும் தேவனே.
2.உம்மாலே நாங்கள் இம்மட்டும்
ஜீவித்து வாழ்கிறோம்;
ஊண், உடை, சுகம், பெலனும்
உம்மால் அடைகிறோம்.
3.இதை அறிந்தும் வீணராய்
நடந்து சீர் கெட்டோம்;
தண்டனைக்கேற்ற நீசராய்
பொல்லாங்கில் நாள் விட்டோம்.
4.இரக்கமுள்ள தேவனே
வருந்திச் சாகிறோம்;
திருத்தி எம்மை ஆளவே
பணிந்து கேட்கிறோம்.
5.அருள் பொழியும் மாரியை
சொரியும், கர்த்தரே ;
முடிவில் மோட்சானந்தத்தை
அடியார்க்கீயுமே.