Sakala Janangale Kaikotti

சகல ஜனங்களே கைகொட்டி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2)
சரணங்கள்
உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
மகிழ்ந்து போற்றிடுவோம் – சகல
போற்றி போற்றி பாடிடுவோமே
தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
ஆற்றிடுவாரே ஆவிதனையே
சாற்றிடுவோம் துதியை – சகல
3.தாழ்வில் நம்மை நினைத்த தேவனை
வாழ்நாள் எல்லாம் வாழ்த்தி துதிப்போம்
துதிகளின் பாத்திரர் தூயாதி தூயோனை
துதித்து உயர்த்திடுவோம்
தேசத்தில் உயர்த்திடுவோம்
தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும்
கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
எழுந்தருளி வருவார் – சகல
கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார்
சத்தியத்தில் நிற்போர் மறுரூபமடைவார்
விரைவில் இயேசு வேகமே வருவார்
சந்திக்க ஆயத்தமா? – சகல
அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
அதில் ஒன்று நமக்காய் ஆயத்தம்பண்ணி
அழைக்கவே வருவார் அனுதினம் நாமும்
அல்லேலூயா பாடுவோம் – சகல
சகல ஜனங்களே கைகொட்டி பாடல் வரிகள், Sagala Janangalae Kaikotti Lyrics