Sagala Ganathirkum Pathirarae song lyrics

சகல கனத்துக்கும் பாத்திரரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சகல கனத்துக்கும் பாத்திரரே
சகல மகிமைக்கும் பாத்திரரே
துதிக்கும் வேளையில் அருகினிலே
கடந்துவருகின்ற கன்மலையே
நீர் மாத்திரம் நல்லவர்
நீர் மாத்திரம் வல்லவர்
ஆராதனை எபினேசர்க்கே
ஆராதனை இம்மானுவேலருக்கே-2
1.நீர் என்றும் துணையாளர்
துன்பங்கள் போக்கும் மணவாளர்-2
சர்வத்துக்கும் மேலான ஆண்டவர்
அகிலத்தையும் ஆட்கொள்ளும் வல்லவர்-2
மெய்யான தேவன் நீரே வேறொருவர் இல்லையே – ஆராதனை
2.நீர் என்றும் என் அன்பர்
என்னை ஆட்கொள்ளும் என் நேசர்-2
உம்அன்பிற்கு இணை ஏதும் இல்லையே
உம் பாசம் எந்நாளும் உள்ளதே
அன்பின் மா ஜோதியே நீர் எந்தன் நண்பரே – ஆராதனை