saanthi thedi alaindhen ulagil

சாந்தி தேடி அலைந்தேன் உலகில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சாந்தி தேடி அலைந்தேன் உலகில்
சாந்த சொரூபி என்னை நாடி வந்தார்
மாந்தர்க்கெல்லாம் சாந்தி வழங்கும்
மாதேவன் இயேசு பாதம் பணிந்தேன்
சத்தியம் ஜீவன் வழியும் அவரே
சர்வமும் இயேசு திருவருளே
உத்தமர் இயேசுவின் நாமத்தை வாயால்
உச்சரித்தால் உள்ளத்தில் சாந்தி சாந்தி
நித்தமும் நம்மை காப்பவர் இயேசு
நித்திய வாழ்வில் சேர்ப்பவர் இயேசு
கர்த்தராம் இயேசுவின் சிலுவை காட்சி
கண்களால் கண்டேன் இதயத்தில் சாந்தி
பொய்யான தெய்வத்தை
நாடி நான் அலைந்தேன்
மெய்யான தெய்வம்
என்னை தேடி வந்தார்
ஐயத்தில் உண்மையான
தெய்வம் யாரென்ற
ஐயத்தால் உள்ளத்தின்
அமைதியை இழந்தேன்
மனிதனை புனிதனாய் மாற்றிட வந்த
மாதேவன் இயேசுவால்
சாந்தி நான் அடைந்தேன்