1.ratsippu suththa thayaval

ரட்சிப்பு சுத்த தயவால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.ரட்சிப்பு சுத்த தயவால்
உண்டான தேவதத்தம்;
அது நாம் செய்த தர்மத்தால்
கிடைப்பது அபத்தம்;
பூலோகத்தின் கடன்களை
செலுத்தித் தீர்த்த யேசுவை
அண்ணாந்து பார்க்க வேண்டும்.
2.தெய்வீக கற்பனைகளை
நாம் கைக்கொள்ளாமல் விட்டு
துர் சிந்தையாலே பாவத்தை
எப்போதும் நடப்பித்து
கர்த்தாவைக் கோபமூட்டினோம்,
நிர்ப்பந்தத்தைச் சம்பாதித்தோம்,
சீர்கேடு பெருகிற்று.
3.இப்போதோ யேசு க்றிஸ்துவால்
நாம் நீதிமான்களாயும்
தேவாவியின் நற் க்ரியையால்,
ஜென்மிக்கப்பட்டோராயும்,
மெய்த் தொண்டராயும் நடப்போம்
கர்த்தாவின் அன்பைக் கூறுவோம்
எந்நாளும் துதி செய்வோம்.
ரட்சிப்பு சுத்த தயவால் பாடல் வரிகள், Ratchippu Sutha Thayaval Lyrics