Ratham Vallathae

இரத்தம் வல்லதே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே
சுத்தம் சுத்தம் சுத்தம் செய்யுமே
தத்தம் தத்தம் செய்திடுமேன்
முற்றிலும் மாற்றிடுவார்
சரணங்கள்
1. பாவியுன்னிருதயம்தனிலே பார்
தேவனின் கிருபையை எண்ணி இப்போ
பாவத்தை முற்றிலும் எறிந்துவிட்டு
இயேசுவின் பாதமே எழுந்து செல்லு – இர
2. உன் நிர்ப்பந்த ஜீவியம் மாறிடுமே,
அவர் அற்புத ஆனந்த மளிப்பாரே;
இப்போ முழுவதும் தாழ்த்துவதே
தெய்வத்துக் குகந்திட்ட பலியாமே – இர
3. சூரியன் முன்னே பனி போலும்
காற்றுக்கு முன்னே புகை போலும்
ஆவியின் முன்னே பாவமுமே
காற்றாய்ப் பறந்தது மாய்ந்திடுமே – இர
இரத்தம் இரத்தம் இரத்தம் வல்லதே பாடல் வரிகள், Raththam Raththam Raththam Vallathae Lyrics