Ratchipin Aanantha Santhosangkaana

இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா
சரணங்கள்
1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது
ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்
அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்
நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்
நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;
தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா – இரட்சி
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா பாடல் வரிகள், Ratchipin Aanantha Santhosangkaana Lyrics