Rajaa Um Maalikaiyil

இராஜா உம் மாளிகையில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் – உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
1. என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே !
2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே !
3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே !
4. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே !
5. உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே !
6. தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே !