puththiyulla sthiree than veettaik kattukiral

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்
புத்தியில்லா ஸ்திரீ அதை இடித்துப்போடுகிறாள் – 2
அந்தப்படி மனைவிகளே சொந்த புருஷனுக்கு கீழ்ப்படிங்க
கற்புள்ள நடக்கையால அவர ஆதாயம் பண்ணுங்க – 2
அழியாத அலங்காரமோ உங்கள் சாந்தமும் அமைதலுமே
தேவனின் பார்வையிலோ விலையேறப்பெற்றது – 2 – புத்தியுள்ள ஸ்திரீ
மதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள எந்த ஸ்திரீயும்
பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்கு சமானம் – 2
மெதுவான பிரதியுத்திரம் கோபத்தை மாற்றிடுமே
கடுஞ்சொல் பேசுவதோ கோபத்தை எழுப்பிடுமே – 2 – புத்தியுள்ள ஸ்திரீ
குணசாலியானவளை கண்டுபிடிப்பவன் யார்?
அவளுடைய விலையோ முத்திலும் உயர்ந்தது – 2
புருஷனுடைய இதயம் அவளை என்றும் நம்பும்
அவன் சம்பத்தோ பூமியிலே என்றும் குறையாது – 2
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்
புத்தியில்லா ஸ்திரீ அதை இடித்துப்போடுகிறாள் – 2
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை பாடல் வரிகள், Puthilulla sthree than veettai Lyrics