puththiyulla kannikai pool

புத்தியுள்ள கன்னிகை போல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புத்தியுள்ள கன்னிகை போல்
மணவாளனை சந்திக்க
பரிசுத்த ஆவியாம் எண்ணையோடு
ஜீவாலித்து எரிந்திட
இறுதி வரை இயேசுவுக்காய்
எழுந்து ஒளிவீசிட
ஆயத்தமாகிடுவோம்-4
1.மணவாளன் வரும் வேளை அறியாததினால்
எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம்-2
விழித்திருந்து ஜெபிப்போம்-கிருபையால்
ஆவியின் கனி கொடுப்போம்-2
பரிசுத்த ஆவியில் நிறைந்திருப்போம்-2
2.பரிசுத்த தேவனை சந்தித்திட
எப்பொழுதும் பரிசுத்தமாயிருபோம்-2
குற்றம் அறிக்கை செய்வோம்-கிருபையால்
குறைகளை விட்டிடுவோம்-2
வேத வசனத்தால் நிறைந்திருப்போம்-2
3.பிரதான அன்பின் கட்டளையை
எப்பொழுதும் அதை நிறைவேற்றியே-2
சுவிசேஷம் சொல்லிடுவோம்-கிருபையால்
சீஷர்களாக்கிடுவோம்-2
ஆத்தும பாரத்தால் நிறைந்திருப்போம்-2