puthi ketta athi maramae

புத்தி கெட்ட அத்தி மரமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

புத்தி கெட்ட அத்தி மரமே ஓ
சக்தி கெட்ட அத்தி மரமே – உன்னை
சக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்கு
வெட்கம் தந்த அத்தி மரமே
ஒண்ணாம் வருஷத்திலும் ஒன்னும் இல்லை
ரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை – உன்னில்
உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டு
கட்டிக் காத்த தோட்டானுக்கு
வெட்டிபோட மனதுமில்லை
காய்ந்த மரமாக இருப்பதென்ன – நீ
கனியாத மரமாக நிலைத்ததென்ன
மலடான மரமாக போனதென்ன- நீ
மன்னவனின் மகிமையை இழந்ததென்ன
காய்க்கும் மரமாக இருந்திடணும் – நீ
கனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும்
நீரோரம் நடப்பட்ட நல் மரமாய்
பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும் – நீ