Praise Tamil Christian Praise Mashup Songs

துதி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.துதி தங்கிய பரமண்டல சுவிசேஷக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன நேமம்!
2.துதிப்போம் அல்லேலூயா பாடி மகிழ்வோம் மகிபனைப் போற்றி மகிமை தேவ மகிமை – தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா
3.தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒருமனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே
4.உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – 2
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – 2 அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்.
5.அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தனைக் கொண்டாடுவேன்.
6.துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்திரிப்போமே
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்.
7.எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன்.
8.மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார் பார்வை நிறைந்த தூய்மை தந்தார் சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார் செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார்
துதிப்பதே என் தகுதியல்லோ துதித்திடுவேன் என் இயேசுவை.
9.துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
10.துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஓ ! நீரே ராஜாவே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ , எல்லாமுமே ஓ எல்லாமுமே
துதி கனம் மகிமையுமக்கே
ஓ ! நீரே ராஜாவே.
Thuthi Thangiya Paramandala – Vedanayagam Sastiriyaar
Thuthippom Allelooyaah Paadi – Rev. R. Jeyasingh Kalgura
Deva Devanai Thuthithiduvom – ( MPA )
Aanantha Kalippulla Udhadugalaal – Fr. Berchmans
Enthan Ullam Puthu Kaviyaalae – Sis. Sara Navaroji
Thuthiththu Paadida Paathirame – Sis. Sara Navaroji
Entha Kaalathilum – Bro. V Nataraja Mudaliar
Thuthipathae En Thaguthiyallo – Rev. Dr. Rajendran
Thuthi Sei Maname Nitham – Rev. K. Jebamani Yesudoss
Thuthi Gana Magimai Umakke – ( Covention Song )
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya