poothumaiya poothummayya

போதுமையா போதுமையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போதுமையா போதும்மய்யா
கிருபை ஒன்றே போதுமையா -2
என்னை தாங்கிடும் கிருபையே
என்னை நடத்திடும் கிருபையே
என்னை சூழ்ந்திடும் கிருபையே
உங்க கிருபையே -2
சோர்ந்து போன நேரங்களெல்லாம்
தூக்கி என்னை சுமந்ததும்
துவண்டு போன நேரங்களெல்லாம்
தேற்றும் கிருபையே -2
என்னை தாழ்வில் நினைத்ததும்
என்னை தோழில் சுமந்ததும்
உயர்த்தி வைத்ததும்
உந்த கிருபையே -2 போதுமையா
கலங்கி நின்ற நேரங்களெல்லாம்
கண்ணீரை துடைத்ததும்
காயப்பட்ட வேளைகளில்
காக்கும் கிருபையே -2
என்னை தேடி வந்ததும்
என்னை தெரிந்து கொண்டதும்
உயர்த்தி வைத்ததும் உங்க கிருபையே -2 போதுமையா