pookum pathai ariyene

போகும் பாதை அறியேனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

போகும் பாதை அறியேனே
செல்லும் இடத்தை அறியேனே
ஒன்று மட்டும் அறிந்துகொண்டேன்
நல்ல மேய்ப்பன் நடத்துகிறீர்
நடத்தி செல்லும் வழிதனிலே
நடந்து வருவேன் தினந்தோறும் நான் -2
மேய்ப்பன் சத்தம் தொனிக்க தொனிக்க
ஆடு நான் தினம் செவிகொடுப்பேன்
மேய்ப்பன் சத்தம் தொனிக்க தொனிக்க
கீழ்ப்படிந்து பின்செல்லுவேன்
உம் கையில் நான் இருக்குகிறேன்
என்னை யார்தான் பிரித்துக்கொள்ள கூடும்
பிதாவின் கரத்தில் நான் இருக்குகிறேன்
என்னை யார்தான் பிரித்துக்கொள்ள கூடும்
கெட்டுப்போவதில்லை, அழிந்திடவில்லை
நித்திய ஜீவனை கொடுத்தவரே
ஒரு நாளும் கெட்டுப்போக மாட்டேன்
அழிந்திட மாட்டேன்
உம் ஜீவன் எனக்குள்ளே வைத்தவரே
உம் மந்தையின் ஆடு நான்
உம்மை நம்பி இளைப்பாறிடுவேன்
எதற்கும் பதறாத ஆடு நான்
உம்மை நம்பி இளைப்பாறிடுவேன்
உம் சொல்லை மட்டும் கேட்கும்
செல்ல பிள்ளை நானே
உம் தோளில் சாய்ந்து நான் மகிழ்ந்திடுவேன்
மேய்ப்பனின் சொல்லை மட்டும் கேட்கும்
செல்ல பிள்ளை நானே
உம்மையே நம்பி நான் வாழ்ந்திடுவேன்