poo ! poo ! poomele pooththatum poomele

பூ பூ பூமேலே பூத்தாடும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
Carol பாட்டுக்கள் , வண்ண star கள்(நம் )
மனதில் மகிழ்ச்சி என்றும்
நட்பு மலரட்டும் வாழ்க்கை செழிக்கட்டும்
இயேசு நம்மோடென்றும்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
1.வானம் பூமி ஈடாகுமா
அவர் அன்பிற்கு இணையாகுமோ
பாவ மனிதரை மீட்டிடவே
ஏழை குழந்தையாய் அவதரித்தார்
பனியின் மத்தியில், அமைதி தொழுவத்தில்
மீட்க தேவன் வந்தார்
அரண்மனை இல்லாமல் , துணியும் இல்லாமல்
அன்பாய் மனிதனானார்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
அலை போல் வரும் துன்பங்களும்
புயல் போல் வரும் இன்னல்களும்
பனி போல் என்றும் மாறிவிடும்
முகில் போல் அது நீங்கிவிடும்
சோகம் நீங்கிடும் தாகம் தீர்ந்திடும்
வாழ்க்கை சீராய் மாறும்
தேடல் கைகூடும்
இன்பம் செழித்தோடும்
வாழ்வு இசையாய் மாறும்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
Carol பாட்டுக்கள் , வண்ண star கள்(நம் )
மனதில் மகிழ்ச்சி என்றும்
நட்பு மலரட்டும் வாழ்க்கை செழிக்கட்டும்
இயேசு நம்மோடென்றும்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்