piyoo ennum punithare – Pio Enum Punitharae

பியோ என்னும் புனிதரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பியோ என்னும் புனிதரே – Pio Enum Punitharae
பியோ என்னும் புனிதரே தயை நிறைந்த மனிதரே – 2
குறைகள் நிறைந்த உலகினிலே
நிறைவாய் இறைவனில் வாழ்ந்தவரே – 2
பியோ என்னும் புனிதரே தயை நிறைந்த மனிதரே
1. ஐந்து புலன்களை ஆண்டதனால் ஐந்து காய வரம் பெற்றவரே
நம்பிக்கையோடு வாழ்ந்ததனால் நானிலம் போற்றும் குருவானாய்
உந்தன் காயங்கள் கண்டு கரைந்துவிட்டோம்
எங்கள் வாழ்க்கையை திருத்த துணிந்து விட்டோம் -2
2. இருவேறு இடங்களில் இருக்கின்ற மாபெரும் பாக்கியம் பெற்றவர் நீர்
நடக்க இருப்பதை அறிவித்த நடமாடும் தூதுவன் ஆனவரே
உந்தன் காயங்கள் கண்டு கரைந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை திருத்த துணிந்து விட்டோம் – 2
3. இத்தாலி தேசத்தின் இமயம் நீ
உரோமை திருச்சபையின் மகிமை நீ
ஜெபமாலை என்னும் ஆயுதத்தால்
ஜெகத்தினை வென்ற மன்னவன் நீ
உந்தன் காயங்கள் கண்டு கரைந்துவிட்டோம் எங்கள் வாழ்க்கையை திருத்த துணிந்து விட்டோம் – 2
RC Catholic VBS Tamil Song With Lyrics பியோ என்னும் புனிதரே – Pio Enum Punithara|