pinchu pona ullam ullalyrics

பிஞ்சு போன உள்ளம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பிஞ்சு போன உள்ளம் உள்ள
பிஞ்சு நானய்யா
தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா
வஞ்சனை நிறைந்த இந்த உலகில் தானய்யா
அஞ்சி நிற்கும் எனக்கு தான்
துணைதான் நீரே ஐயா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா
தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா
பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா
புல்லுள்ள இடத்தில் மேய்க்கும்
மேய்ப்பன் நீர் ஐயா
ஏசப்பா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நானய்யா
உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா
கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா
சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
உலகம் நேசம் எனக்கு இனி
வேண்டாம் இயேசய்யா
உண்மையான உந்தன் அன்பு
போதும் இயேசய்யா
உன் எண்ணம் ஏக்கம் எல்லாமே
நீர்தான் இயேசய்யா
உம் வருகையிலே என்னை
சேர்த்துக் கொள்ளும் ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா
ஏசய்யா ஏசய்யா