Pesum Deivam Neerthaan

பேசும் தெய்வம் நீர்தான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பேசும் தெய்வம் நீர்தான் ஐயா
நீர் பேசும் நான் கேட்கிறேன்-2
நீர் பேசினால் என் ஆத்துமா
உம்மிலே பெலன் அடையும்-2-பேசும்
1.ஆதாமோடு பேசினீரே
பேசி தினமும் மகிழ்ந்தீரே-2
என்னோடு பேசும்
என்னில் நீர் மகிழும்-2
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்-2-பேசும்
2.ஆபிரகாமோடு பேசினீரே
ஆசீர்வதித்து உயர்த்தினீரே-2
என்னோடு பேசும்
என்னையும் உயர்த்தும்-2
உம்மில் நான் வளர்ந்திடுவேன்-2-பேசும்
3.மோசேயோடு பேசினீரே
இஸ்ரவேல் ஜனத்தை நடத்தினீரே
என்னோடு பேசும்
என்னையும் நடத்தும்-2
(நான்) உம்மோடு நடந்திடுவேன்-2-பேசும்
பேசும் தெய்வம் நீர்தான் பாடல் வரிகள், Pesum Deivam Neerthaan Lyrics