peruperroor peruperroor – Pearu Pettor Pearu Pettor

பேறுபெற்றோர் பேறுபெற்றோர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs and Roman Catholic Songs collection.

பேறுபெற்றோர் பேறுபெற்றோர் – Pearu Pettor Pearu Pettor
தி.பா 128:1-5
(திருமணம் என்பது
இறைவனின் கொடை
கடவுள் ஆதாமையும் ஏவாளையும் இணைத்தார்.
இரு இதயங்களை மிகுந்த கனிதர ஒரு இதயமாக இணைக்கிறார்
இயேசுவின் அன்பை சுவைக்கும் நீங்களும் பேறுபெற்றோர்…
பல்லவி
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
ஆண்டவருக்கு அஞ்சுவோர் பேறுபெற்றோர்
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
இயேசு வழி நடப்போர் பேறுபெற்றோர்
சரணம் – 1
ஆண்டவரை நம்பி இருப்போர் பேறுபெற்றோர்
உழைப்பின் பலனை உன்போர் பேறுபெற்றோர் – 2
கனித்தரும் திராச்சைக் கொடிபோல் துணைவியரும்
ஒலிவக் கன்றை போல் பிள்ளைகளும் … 2
சரணம் – 2
ஆடவர்க்கு ஆசி கிடைத்ததே பேறுபெற்றோர்
பிள்ளைகளின் பிள்ளையை கண்டால் பேறுபெற்றோர் – 2
சீயோன் மலையிலிருந்து ஆசி வரும் – நம்
விண்ணகத் தந்தையிடம் -நல் வாழ்வு வரும் – 2
சரணம் – 3
ஆண்டவரை கடவுள் என்போர்
பேறுபெற்றோம் அவரிடம் தஞ்சம் புகுவோர் பேறுபெற்றோம் – 2
இயேசு நல்லவர் என்று சுவைத்து பார்ப்போம்
நமக்குள் வாழ்கிறார் என்று உணர்ந்து பார்போம் – 2
End பல்லவி
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
நீதி வழி நடப்போர்
பேறுபெற்றோர்
உண்மை வழி நடப்போர்
பேறுபெற்றோர்
பேறுபெற்றோர் பேறுபெற்றோர்
ஒளியில் நடப்போர்
பேறுபெற்றோர்
அன்பை பகிர்வோர்
பேறுபெற்றோர்