penne nee kireetam alangkara kireetam

பெண்ணே நீ கிரீடம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்
பெண்ணே
நீ எழுந்து சென்றால் வெற்றி உனது
தெபொராள் நீ அல்லவோ
நீ துணிந்து நின்றாள் ஜெயமும் உனது
எஸ்தர் நீ அல்லவோ – (2)
பெண்ணே உன் ஜெபமே தேவனின் கரத்தை அசைத்திடுமே
பரமனின் சேனை உனக்காய் அரனாய் என்றும் நின்றிடுமே
வெற்றி உனது ஜெயமும் உனது
பெண்ணே புறப்படு நீ
தேசத்தை அசைத்திட
உலகத்தை கலக்கிட
இன்றே புறப்படு நீ
பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்
பெண்ணே
தேசத்தின் எழுப்புதல் உந்தனின் சொந்தம்
அஃஸால் நீ அல்லவோ
தேவனின் பாதத்தில் இதயன்தை ஊற்றிடும்
அன்னாள் நீ அல்லவோ – (2)
பெண்ணே உன் ஜெபத்தில் தேசத்தின் எழுப்புதல் எழும்பிடுமே
பெண்ணே உன் வல்லமை தீயே அனலாய் பற்றிடுமே
வெற்றி உனது ஜெயமும் உனது பெண்ணே புறப்படு நீ
தேசத்தை அசைத்திட உலகத்தை கலக்கிட இன்றே புறப்படு நீ
பெண்ணே நீ கிரீடம் அலங்கார கிரீடம்
பெண்ணே