Payanathin Kalaipinaale

பயணத்தின் களைப்பினாலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலே
குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ…
நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்
என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா – 2
நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்
உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிது
கயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமே
கையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா – 2
எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்ல
நான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் காணும் வரையில் தாகமில்லை
எனக்கந்த தண்ணீர் ஐயா தாரும் ஐயா பெருந்தாகம்
தீர்ந்துவிடும் என்றால் ஐயா இடுப்பொடிய வேலை இல்லை – 2
தருகின்றேன் பெண்ணே நீயும் உன் கணவன் இங்கு வரவே
அழைத்து வந்து காண வேண்டும் அக்கணமே நான் தருவேன்
மனம் திறந்து சொல்கின்றேன் எனக்கோ கணவனும் இல்லை
உம்மிடம் நான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஐயா – 2
எல்லாம் சரிதான் பெண்ணே ஐந்து கணவர் வாழ்ந்தார்
இருப்பவனும் கணவன் அல்ல ஏதுமில்லா பெண்தான் நீ
தலைவா நீர் ஞானி ஐயா நற்றொழுகை புரிந்திடவே
நீங்கள் சொல்லும் எருசலேமே நிலையான இடமா ஐயா – 2
தலைவனையே தொழுவதற்கு இடமா வேண்டும் பெண்ணே
ஓங்கிவரும் ஆவியிலும் உத்தமனை தொழுதிடலாம்
பாவத்தை தீர்ப்பதற்கு இயேசுபிரான் வருகின்றார்
நேசமகன் வருகின்றபோது அனைத்தையுமே சொல்லிடுவார் – 2
நேசமகன் அந்த இயேசு நாயகன் நானே பெண்ணே
பாவங்கள் தீர்க்கவல்ல பாசமகன் நான் பெண்ணே
வியக்கின்றேன் வியக்கின்றேன் ஐயா விந்தைமிகு இயேசுதேவ
ஊருக்குள்ளே விரைகின்றேன் நான் உன்மையை சொல்லிடவே – 2