paviyin sangkeetham – Psalm Of A Sinner

திரும்ப முயல்கிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாவியின் சங்கீதம் – Psalm Of A Sinner
திரும்ப முயல்கிறேன்
மனம் திருந்த முயல்கிறேன்
என் பாவ நிலை விட்டு
மீள முயல்கிறேன்
மாய்மால வாழ்க்கையோடு
இவ்வுலகினில் வாழ்கிறேன்
என் அந்தரங்க அழுக்கை
என் தேவரீர் பார்க்கிறீர்
ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்
அப்போது நான் சுத்தமாவேன்
என்னை கழுவும் அப்போது
உறைந்த மழையிலும் வெண்மையாவேன்
பாவியான என் மேல் கிருபையாய் இரும்
உம் முகத்தை எனக்கு எப்போதும் மறைக்காதேயும்
பாதகன் நான் பதறுகிறேன்
கண்ணீரோடு கதறுகிறேன்
பிள்ளையாய் என்னை மாற்றிடும் அன்பு நேசரே
வார்த்தையை கேட்கிறேன்
செவி கொடுக்க மறுக்கிறேன்
பிறர் குறைகள் காண்கிறேன்
என் குற்றத்தை மறைக்கிறேன்
மனுஷரை பிரியப்படுத்தும்
பொய் வாழ்க்கை வாழ்கிறேன்
என் உள்ளான மனுஷனை
என் உன்னதர் பார்க்கிறீர்
கபடு நிறைந்த என் உள்ளத்தை
உம் ரத்தத்தினால் கழுவும்
காயம் கட்டி கருணையாய்
கரம் பிடித்து வழி நடத்தும் – பாவியான என் மேல்
என்னை தருகிறேன்
ஜீவ பலியாக
சுகந்த வாசனையாக
என்னை ஏற்றுக் கொள்ளும்
எந்தன் அப்பா நீரே
உந்தன் பிள்ளை நானே
தூரம் போன என்னை
தூக்கி எடுத்துக்கொள்ளும் – பாவியான என் மேல்