pavi esanaiththane theti – Paavi yeasanithanae Theadi

பாவி ஏசனைத்தானே தேடி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாவி ஏசனைத்தானே தேடி – Paavi yeasanithanae Theadi
பல்லவி
பாவி ஏசனைத்தானே தேடித் துயர் மேவினார்;
இதைத் தியானியே.
சரணங்கள்
1.பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன்,
பரிசுத்தத் தூதர் பணிசெய்யும் பொற்பாதன்,
மானிடனாக அவதரித்த தெய்வீகள்
வல்ல பேயை ஜெயித்த மா கன, மனுவேலன்.
2.தீய பாவிகள் பாவ நித்திரை செய்ய,
தேவ கோபாக்கினி அவர் மீதில் பெய்ய,
தோஷம் சுமந்து யேசு தேவாட்டுக் குட்டி
துன்பக் கடலில் அமிழ்ந் தாற்றுதல் செய்ய,
3.இந்தப் பாத்திரம் என்னை விட்டகலாதோ?
இல்லையானால் உமது இஷ்டமதென்றே
சிந்தை துயரடையச் செப்பினார்; அன்றோ
சுவாமி உனக்காய்ப் பிணைபட்டதால், அந்தோ!
4. கெத்செமனேயில் ஏசு பட்டமை நினையே;
கேவலமான உன் தன் பாவத்தை மறவே;
ஆத்தும நேசர் பதம் ஆவலாய்ப் பணியே;
அன்பின் கரத்தாலுனை அணைப்பார், நிச்சயமே.