pavam pokka thannai paliyay

பாவம் போக்க தன்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாவம் போக்கத் தன்னைப் பலியாய்
ஈந்த இயேசுவை நாடு
பாவ வழியை விடவே மீட்பர்
இயேசு வழியை நாடு
பாரில் பாடுகள் சகித்து சிலுவை
சுமந்த இயேசுவை நாடு
பாசத்துடனே மோட்சம் சேர்க்கும்
பரமன் அருளை நாடு
நாடு - நாடு - நாடு - நாடு - நாடு
இயேசுவை நாடு
நாடு - நாடு - நாடு - நாடு
இயேசு வழியில் நாடு
கண்ணை இமைகள் காப்பது போல
காத்திடும் கர்த்தனைப் பாடு
உன்னத மீட்பு தரவே இயேசு
உயிர்த்தெழுந்தாரே பாடு
எண்ணமெல்லாம் நிறைந்த கர்த்தர்
உன்னிடம் வருவார் பாடு
எண்ணில்லாத நன்றி செலுத்தி
இறைவன் புகழைப் பாடு
உன்னைப் பெலத்தால் நிரப்பும் இறைவன்
பாடியே தாளம் போடு
தன் அருள் தந்திடும் பரமனைப் போற்றி
இருகை தாளம் போடு
இன்னல்கள் அகற்றிய இயேசுவை நாடியே
புகழ் மாலைகள் போடு
இன்னிசை முழங்கக் கரங்களை உயர்த்தி
அல்லேலூயா போடு
போடு - போடு - போடு - போடு
போடு தாளம் போடு
போடு - போடு - போடு - போடு
இருகை தாளம் போடு.