paththirar iyesu paththirar

பாத்திரர் இயேசு பாத்திரர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாத்திரர் இயேசு பாத்திரர்
ஆட்டுக் குட்டியானவர் ஆராதனைக்கு பாத்திரர்
முகமெல்லாம் இரத்தம்
உடலெல்லாம் இரத்தம்
இவரே துதிக்கு பாத்திரர்
கைகளில் ஆணி கால்களில் ஆணி
இவரே துதிக்கு பாத்திரர்
முள்முடி அணிந்த இரட்சகர்
இவரே துதிக்கு பாத்திரர்
அழகெங்கே சவுந்தர்யம் எங்கே
அந்தக்கேடு அடைந்த காரணம் எங்கே
எனக்காகவே பலியானிரே
அதற்காகவே அன்புகூறுவேன்
இடர்வரினும் உமைப்பிரியேன்
தடைவரினும் தொடர் துதியே
படுகுழியில் நான் கிடந்தேன்
பரிவுடன் என்னை தேடிவந்தீரே
என் தேவனே என் ஜீவனே
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
இமைமூடும் நாள் வரையில்
இணைந்திருப்பேன் உம் உறவில்.