patham thanaik kazhuvukirar

பாதம் தனைக் கழுவுகிறார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாதம் தனைக் கழுவுகிறார்
மணிமுடி சூடுபவர்
கால்கள் தனைத் தழுவுகிறார்
விண்ணகம் ஆளுபவர்
அடிமை நிலை ஏனெடுத்தாய்
இறையின் மகனே
மீட்கும் பரனே
அழுக்கேறிய பாதங்களால்
அலைந்தே திரிந்தேன்
தலைக்கேறிய கர்வத்தினால்
பிரிந்தே நடந்தேன்
பரமனே எழுந்தாய்
பணிவுடன் அமர்ந்தாய்
கழுவியே எனையும்
கனிவுடன் எடுத்தாய்
தாயானாய்
தயாபரமானாய்
நீரா என் பாதங்களை கழுவும் அடிமை
வேண்டாம் நீர் ஆண்டவரே இங்கோர் நிலமை
பரிவுடன் சிரித்தாய் பதிலையும் கொடுத்தாய்
கழுவிட மறுத்தால் பங்கில்லை என்றாய்
இறையானாய் இறை மகனானாய்