1.pathalam, vin, man yavilum

பாதாளம் விண் மண்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.பாதாளம், விண், மண் யாவிலும்
மேலான யேசுவே,
உமக்கு பேய்க் கணங்களும்
நடுங்குவார்களே.
2.உமது நாமம் பாவிக்கு
ஜீவாமிர் தமாமே;
நான் சொஸ்தமாகும்படிக்கு
சஞ்சீவி அதுவே.
3.சிறையுற்றோரின் விலங்கை
தறித்துப் போடுவீர்;
பெலனற்றோர்க்குப் பெலத்தை
கொடுத்துத் தாங்குவீர்.
4.என் வாழ்வு தாழ்வு சாவிலும்
நான் உம்மைப் பற்றுவேன்;
உம்மால் உண்டான மீட்பையும்
கொண்டாடிப் போற்றுவேன்.