patal varikal – varukai patal

இறைக்குலமே குருகுலமே இணைந்து
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – வருகை பாடல்
இறைக்குலமே குருகுலமே இணைந்து வாருங்கள்
இறைவனின் இல்லத்திற்கு விரைந்து வாருங்கள் – 2
கல்வாரியின் பலியினில் கலந்திட வாருங்கள் – 2
காக்கும் தேவனுக்கு நன்றி கூற வாருங்கள்- 2
வருகவே வருகவே பீடம் நோக்கி வருகவே
ஓர்க்குலமாய் ஓரினமாய் ஒன்று சேரவே – 2
1. அழைப்பை ஏற்று பின் தொடர வாருங்கள்
அகம் திறந்து இயேசுவை ஏற்று கொள்ள வாருங்கள்
கிறிஸ்துவின் சீடனாய் அழைக்கப் பெற்றோர் வாருங்கள் – 2
கிறிஸ்துவின் சாட்சியாய் வாழ வாருங்கள் – 2
மானிடரின் மீட்புக்காக மனுக்குலத்தின்
வாழ்வுக்காக தன்னையே பலியாக்கிய இயேசுவை
காண வாருங்கள் – 2 – (வருகவே)
2. பாவியாய் அழைக்கப்பெற்றோர் வாருங்கள்
இறை இயேசுவின் ஊழியனாய் மாறிடவே வாருங்கள் – 2
வரங்களையும் கனிகளையும் பெற்றிடவே வாருங்கள் – 2
அபிஷேக ஒளியினில் வாழ வாருங்கள் – 2
உலகமெல்லாம் சென்றிட நற்செய்தி பரப்பிட
திருமுழுக்கு கொடுத்திட இயேசுவில்
வாழ வாருங்கள் – 2 – (வருகவே)
இறைக்குலமே குருகுலமே இணைந்து பாடல் வரிகள், Iraikulamae Gurukulamae Inainthu Lyrics