patal varikal – varukai patal

இணைந்து வாருங்கள் மகிழ்ந்து
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – வருகை பாடல்
இணைந்து வாருங்கள் மகிழ்ந்து கூடுங்கள்
இறைவன் பலியில் கலந்திட விரைந்து வாருங்கள் – 2
வாருங்கள் வாருங்கள் இறைகுலமே வாருங்கள்
கால தேவன் பலியினில் கலந்திடவே வாருங்கள் – 2
1. அன்பின் வழி அருளின் வழி நாளும் நடந்திட
உண்மை பலி தியாகப் பலி உறவினில் இணைவோம் – 2
சுமை நீங்கி இங்கு சுகம் காண கூடுவோம்
பொருள் வாழ்வை நீக்கியே அருள் வாழ்வை தேடுவோம்
இதயத்தில் இறைவனை நாளும் ஏற்று மகிழ்ந்து வாழ
2. இறை அரசு நாள்தோறும் செழித்தோங்கிட
இறைபலியில் இறைவனின் துணை தினம் வேண்டுவோம் – 2
அன்பில் நாமும் இணைந்து குடும்பமாக மலர்வோம்
அகிலமெங்கும் இறைவனின் சாட்சியாக வாழ்வோம்
ஆறுதல் வழங்கிடும் அன்பர் இயேசு பாதம் தேடி