patal varikal – thiyana patal

நான் தேடும் ஞானம் நீயே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – தியான பாடல்
நான் தேடும் ஞானம் நீயே இயேசைய்யா
என்றும் நானாக வேண்டுமே உன்னில் நானைய்யா – 2
தேனாக ஊறுதே உந்தன் அருளையா
தேற்றும் உன் அருளாலே எல்லாம் ஆகுமைய்யா
போதுமையா இயேசைய்யா நீ எனக்கு
ஆகுமையா எல்லாம் நீ எனக்கு – 2
1. என் சிலுவை நாள்தோறும் நான் சுமக்கனும்
உன் சாட்சி நானாக நித்தம் மாறனும் – 2
சோதனைகள் வந்தாலும் என்னை என்ன செய்திடும் – 2
வேதனை தீர்ப்பவன் நீயிருக்க
எதுவும் ஓய்ந்திடும் (போதுமையா)
2. உன் அன்பு எனை நிறைத்து நான் மாறனும்
உன் சாயல் அயலானில் நான் பார்க்கணும் – 2
படைத்தவனே பரம்பொருளே உன்னில் நான் சங்கமம் – 2
உடையவனே உன்னதனே என்றும் நீயே
என் ஆனந்த நாயகனே (போதுமையா)
நான் தேடும் ஞானம் நீயே பாடல் வரிகள், Naan Theadum Gnanam Neeyae Lyrics