patal varikal – thiruvirunthu patal

உயிர் தரும் உணவே இறைவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்
லா…ல…லா…ல…லா…ல…
உயிர் தரும் உணவே இறைவா – என்
உயிருக்குள் உயிராய் வா..வா
அருள் தரும் ஊற்றே இறைவா
நல்லாற்றலாய் என்னுள்ளம் வா.. வா…
வா..வா..இறைவா வாழ்வின் உறவாய்
என் உயிர் இயேசுவே வா.. வா.. – 2
1. உயிருள்ள விருந்தே என் இறைவா
நலம் தரும் மருந்தாய் எனில் வா.. வா.. – 2
நிரந்தர வாழ்வே என் தேவா – 2
நிம்மதி வாழ்வாய் எனில் வா .. வா.. – 2 (வா..வா..இறைவா)
2. அழியாத உணவே என் இறைவா
ஆன்மா ஒளியாய் எனில் வா .. வா… – 2
அன்பின் பகிர்வே என் தேவா – 2
அனுதின உணவாய் எனில் வா .. வா…2 (வா..வா..இறைவா)
உயிர் தரும் உணவே இறைவா பாடல் வரிகள், Uyir tharum unave iraiva lyrics