patal varikal – kiristhumas patal

இதயம் திறந்தவரே எங்கள் இயேசுவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – கிறிஸ்துமஸ் பாடல்
லா.. ல.. ல்.. லா.. ல.. ல்.. லா…
இதயம் திறந்தவரே எங்கள் இயேசுவே இறை மகனே
இரக்கம் பொழிந்தவரே இந்த இகமெல்லாம் நிறைந்தவரே
உந்தன் கருணையின் கடலினிலே
எங்கள் உலகம் உயிர் பெறுதே
உம் அன்பென்னும் நெருப்பினிலே எல்லாத் தீமையும் கரைந்திடுதே பரிசுத்த உறவாய் மலருதே
எனில் வாருமே இயேசு தெய்வமே
உயிர் ஆகவே உருவாகவே – 2
1. உனக்கெனவே என் தாயின் கருவினில்
தெரிந்து கொண்டீர் என்னை அறிந்தீர்
பயணங்களில் என் பாதைகள் மாறினால்
பாசங்களால் எனை அழைத்தீர் உறவினை உதறி ஊதாரியானேன் காத்திருந்து எனக்கு மறு வாழ்வு அளித்தீர்
தொலைந்திட்ட ஆடு நான்
உன் தோளில் மகிழ்வேன் – 2 – (வாருமே)
2. வெறுமையான ஒர் பாத்திரம்
நான் என்று நிரம்பிடவே அருள் ஈந்தி கள்வனுக்கும்
உயர் பரகதி பேற்றினை பரிசளித்தீர் வழிவகுத்தீர்
கற்களை எறியும் கல்நெஞ்ச கூட்டத்தில்
காயங்கள் இன்றி பாவியை மீட்டீர்
அழிக்கின்ற உலகிலே அருகில் நீர் வேண்டும் – 2 (வாருமே)