patal varikal – kanikkai patal

இறைவனின் பாதம் பலிதரும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
இறைவனின் பாதம் பலிதரும் நேரம்
இணைவோம் நாமும் காணிக்கை
சுமைகளின் பாரம் சுமந்திடும் பாவம்
களைந்திட விழைவோம் காணிக்கை – 2
காணிக்கை இதய காணிக்கை
காணிக்கை எளிய காணிக்கை – 2
ஆ… ஆ… ஆ……
1. பகையுள்ள நெஞ்சம் பகிர்ந்திடும் காணிக்கை
இறைவன் ஏற்பதில்லை
எளியவர் உள்ளம் தரும்நல் காணிக்கை
இறைவன் மறுப்பதில்லை – 2
இதை உணர்ந்தேன் உள்ளம் நினைந்தேன்
தருகின்ற காணிக்கையை ஏற்றருள்வாய் காத்தருள்வாய்
காலமும் துணை நிற்பாய்
2. பட்டம் பதவி பொன்னோ பொருளோ
இறைவன் ஏற்பதில்லை உள்ளதை
உவந்தே அளித்திடும் காணிக்கை
இறைவன் மறுப்பதில்லை – 2
அன்பின் இறைவா எந்தன் தலைவா
இருப்பதை உமக்களித்தோம்
அர்ப்பணமாய் ஏந்தி வந்தோம் எம்மையே ஏற்றிடுவாய்
இறைவனின் பாதம் பலிதரும் பாடல் வரிகள், Iraivanin paatham palitharum Lyrics