parvathangal nilai peyarnthaalum

பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
என் கிருபை உன்னை விட்டு விலகாது
என்றுரைத்த என் இயேசுவே
உம் சொல்லொரு நாளும் உறங்காது – பர்வதங்கள்
இரண்டு மூன்று பேர்களெங்கே
இருக்கும் இடத்தில் நீர் இருப்பீர் -2
இதயம் உம்மை நினைத்திருந்தால்-2
இன்பமாய் ஆவியில் நிரப்பிடுவீர்
இன்னல் நீங்கிட உம்மை அழைப்பேன்
அன்னல் இயேசுவே நீர் வருவீர்(2) – பர்வதங்கள்
ஆறுகளை நான் கடக்கின்ற போது
அக்கினி என்னை சூழ்கின்ற போது-2
அங்கும் அருகில் வந்திடுவீர்-2
அழிவின்றி என்னை காத்திடுவீர்
ஆண்டவரே என்று நோக்கிடும் மனமே
அரவணைக்கும் என்னை உந்தன் கரமே (2) – பர்வதங்கள்
பாடுகளால் நான் தவிக்கின்ற போது
பாருலகம் என்னை வெறுக்கின்ற போது-2
தேடும் விழிகளை நீர் அறிந்து-2
தேற்றிட வருவீர் நீர் பறந்து
போற்றிடுவேன் உம்மை பூரித்து உலமே
போதும் உம் அன்பு வாழ்வில் நலமே (2) – பர்வதங்கள்