parisutham ondraiye vaanjikkiren

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன் – Parisutham Ontraiyae Vaanjikirean
பரிசுத்தம் ஒன்றையே வாஞ்சிக்கிறேன்
பரமனே உம் பாதம் சேவிக்கிறேன்
நஞ்சான நெஞ்சத்தில் தூய்மை தாரும்-2
எந்நாளும் உமக்காய் வாழ்ந்திடுவேன் -2
கசியாத பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
சோதிக்கும் பிசாசை வென்றிடுவேன்
சோதனைகள் மறுரூபத்தின் படிகள் -2
சாதித்த இயேசுவைத் தொடர்ந்திடுவேன்-2
ஜெபத்தின் ஆவியில் நிறைந்திருப்பேன்
தெவிட்டாத வேதத்தில் நிலைத்திருப்பேன்
தொலைதூர தரிசனம் பாரத ஜனமே
நிலைவாழ்வு பெற நான் உழைத்திடுவேன்
தேற்றரவாளனை சார்ந்திருப்பேன்
சீர்மிகு செயல்கள் செய்திடுவேன்
விசுவாச நண்பர்கள் கரம் கோர்த்திடுவேன்
ஜெயம் தரும் தேவனால் வென்றிடுவேன்