Parir Gethsemane

பாரீர் கெத்சமனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Lent Songs collection.

பாரீர்! கெத்செமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே
1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும்
பாடுகள் எனக்காக
2. அப்பா இப்பாத்திரமே
நீங்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய
என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே
3. இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தனரே
4. மும்முறை தரை மீதே
தாங்கொண்ணா வேதனையால்
முன்னவர் தாமே வீழ்ந்து
ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே
5. அன்பின் அருள் மொழியால்
ஆறுதல் அளிப்பவர் – துன்ப
வேளையில் தேற்று வாரின்றியே
பாதகர் அலறுகின்றார். – பாரீர் கெத்சமெனே பூங்காவில்
6.என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து
நான் என்றும் புகழ்ந்திடுவேன்