Paripurana Aandithuvae Lyrics

பரிபூரண ஆண்டிதுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரிபூரண ஆண்டிதுவே -4
வளமை, செழுமை, புதுமை யாவும்
பெற்றிடும் ஆண்டிதுவே
1.ஆபிரகாமின் ஆசீர்வாதமும்
ஈசாகின் ஆசீர்வாதங்களுமே -2
யாக்கோபின் ஆசீர்வாதங்கள் யாவும்
எந்நாளும் நமக்கே உரித்தாகிடும் -2 – பரிபூரண
2.யாபேசின் எல்லையை பெரிதாக்கினார்
தாவீதின் இராஜ்ஜியத்தை ஸ்திரமாக்கினார்-2
சாலமோனின் வர்த்தகங்கள் வளமாக்கினார்
நம்மையும் பெருகிட ஆசீர்வதிப்பார் -2 – பரிபூரண
3.கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்
பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் -2
கர்த்தரின் பிள்ளைகளின் ஆசீர்வாதம்
சந்ததி சந்ததி யாயிருக்கும் -2 -2 – பரிபூரண