parikariye parikariye enakkaka paliyaneere

பரிகாரியே பரிகாரியே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

பரிகாரியே பரிகாரியே எனக்காக பலியானீரே
பரலோகத்தில் என்னை சேர்த்திட எனக்காக பலியானீரே _2
வழி தவறும் ஆட்டை போல தவறி நான் அலைந்தேனையா
வாய் திறவா ஆட்டை போல எனக்காக பலியானீரே..-2
எனக்காக பலியானீரே -பரிகாரியே
சரீரமெல்லாம் வியாதியோடு சாபத்தில் வாழ்ந்தேனையா
என் சாபத்திற்காயா சிலுவையிலே எனக்காக பலியானீரே -2
எனக்காக பலியானீரே -பரிகாரியே
மரித்துப்போன ஆத்துமாவை சரீரத்தில் சுமந்தேனையா
என் ஆத்துமாவில் ஜீவன் தர எனக்காக பலியானீரே-2
எனக்காக பலியானீரே
என் இயேசுவே என் இயேசுவே எனக்காக பலியானீரே
பரலோகத்தில் என்னை சேர்த்திட எனக்காக பலியானீரே
எனக்காக பலியானீரே