parane ummai nan thuthippatharkku – Paranae ummai naan thuthipatharku

பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு – Paranae ummai naan thuthipatharku
பரனே உம்மை நான் துதிப்பதற்க்கு
நாஒன்று போதுமா,
பலியாய் உமக்கர்ப்பணிப்பதற்கு ஆடொன்று போதுமா,
கர்த்தனே இன்னும் எப்படி புகழ்வேன்
கைமாறாய் என்செலுத்திடுவேன்,(-2)
காருண்யமே கடன் தீர்க்க வருவேன்,
என்ன காணிக்கையை பதிலாக தருவேன்,(-2) – பரனேஉம்மை
வலம் இடம் இருபுறத்திலும் பெருகப்பண்ணினீரே,
வாழும் கூடாரமதை விசாலப்படுத்தி,
வலியவர்க்கெனை ஈடாக்கினிரே
நான் அருகதை தான் உள்ளவனா? (-2) – பரனே உம்மை
நின் ஜீவ வார்த்தையை
என்னில் உற்றெனப்பாய்ச்சி,
என் ஜீவியமதையே உம் சாட்சியாய் நிறுத்தி,
எந்தையே என்னை உயர்த்தி வைத்திரே,
நான் அருகதை தான் உள்ளவனா? (-2) – பரனே உம்மை