Paran Yesaiya Lyrics

பரன் இயேசையா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரன் இயேசையா பாடல் வரிகள்
பரன் இயேசையா
எங்கள் அரண் இயேசையா
கொடும்காற்றில் கலையாமல்
நீர் காத்த இந்த கூடு
உமதன்பின் பசையாலே
கீல் பூசிய இந்த வீடு
மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும்
Chorus;
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள் அரன் இயேசையா
Stanza-1
மறுநாளை சந்திக்க
பெலனின்றி உறங்கின
ராத்திரிகள் வந்து போனதையா
எதற்க்காக வாழ்கிறோம்
என்றெண்ணி கலங்கி
படுக்கையை கண்ணீரால் நனைத்தோமையா
ராக்காலத்தின் கேள்வியின் மேல்
சூரியனாய் உதித்தீர் ஐயா
Stanza-2
உணவும் உடையும்
இருக்கின்ற இடமும்
உம் கரம் எங்களுக்கு தந்ததையா
ஏங்கின பொருளும்
உயர்வும் வசதியும்
எளிதாக எங்களுக்கு தந்தீரையா
காட்சியாக வாழ்ந்தோமையா
சாட்சியாய் உள்ளோமையா (இப்போ ) – பரணேசையா எங்கள் அரணேசையா