paralookaththil enakku neere natha

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா
பூலோகத்தில் எனது விருப்பமும் நீரே-2
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை எனது ஆயுள் எல்லாம்
தப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கைவிடா நேசர் நீர் ஒருவர் தானே-2
உற்றாரும் உலகமும் வெறுத்திட்டாலும்
உண்மையாய் நேசிப்பவர் நீர் அல்லவோ-2 -ஆராதனை
எனக்கு எதிராக ஓர் பாளையம் வந்தாலும்
பாதுகாக்கும் புகலிடம் நீர் அல்லவோ-2
தீங்கு நாளில் என்னை உமது கூடாரத்தில்
மறைத்தென்னை ஆற்றுபவர் நீர் அல்லவே-2 -ஆராதனை
என் முகத்தை தேடுங்கள் என்று அழைத்தீரே
நாதா உம்முகத்தின் செயலினால் திருப்தியாக்கும் தேவா-2
உம் முகத்தின் பிரகாசமே என்றென்றும் வேண்டும்
என்றென்றுமே நிறைத்து என்னை நடந்துடுவீரே-2 -ஆராதனை