paralooka pithave

பரலோக பிதாவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரலோக பிதாவே
உந்தன் நாமமே
பரிசுத்த படவேண்டுமே
உம் ராஜ்ஜியம் வரவேண்டுமே – பரலோக
பரத்தில் உந்தன் சித்தம்
செய்ய படுவது போல-2
இவ்வுலகத்திலேயும்
செய்யப்படுவதாக -2
அன்றன்று வேண்டிய அகாரம்
இன்று எங்களுக்கு தாரும் -2
ஜீவ அப்பம் நீரே
அதுவே எங்கள் பெலனே-2- பரலோக
எங்கள் கடனாளிகளுக்கு
நாங்கள் மன்னிப்பதுபோல -2
அடியார் பாவ கடனை
எமக்கு மன்னித்தருளும் -2- பரலோக
சோதனைக்குள் எங்களை
பிரவேசிக்க ஒட்டாமல் -2
தீமையினின்று எங்களை
இரட்சிக்க வேண்டுமே -2 – பரலோக
ஏனெனில் பரலோக ராஜ்யம்
வல்லமையும் மகிமையும்-2
என்றென்றைக்கும்
உம்முடையவைகளே -2 – பரலோக
ஆமென்!