paralokame paralokame

பரலோகமே பரலோகமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரலோகமே பரலோகமே
பேரின்பம் பேரின்பமே
தினந்தோறுமே தினந்தோறுமே அங்கு
ஆனந்தம் ஆனந்தமே
ஓஹோ … பேரின்பம் போரின்பமே
இயேசு ராஜா அழகையெல்லாம்
ஒவ்வொன்றாக ரசித்திடுவேன்
அப்பப்பா என்ன சந்தோஷமே
எப்படி நான் சொல்லுவேன்
அவர் மடியில் அமர்ந்திடுவேன்
மார்பினிலே சாய்ந்திடுவேன்
கட்டிப்பிடித்து முத்தம் செய்வேன்
எந்நாளும் களிப்பூருவேன்
கவலையில்ல கண்ணீரில்ல
கஷ்ட நஷ்டம் அங்கு இல்ல
எப்போதும் அங்கு சந்தோஷமே
எந்நாளும் கொண்டாட்டமே