panthayap porul perruk kolla – Panthaya Porul Pettrukolla Odidu

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள – Panthaya Porul Pettrukolla Odidu
பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள ஓடிடு
பாரமான யாவையும் தள்ளிடு
தூய்மையான வாழ்வை நாடிடு
சாத்தானின் சதிகளை வென்றிடு மாரநாதா அல்லேலூயா
இயேசுராஜா வேகம் வருகிறார்
அந்தகார கிரியைகள் அகற்றிடு
ஒளிநிறைந்த வாழ்வு வாழ்ந்திடு
ஆவியிலே அனலாக ஜொலித்திடு
அழியாத ஜீவன் பெற்றிடு
புத்தியுள்ள கன்னிகைப்போல் எப்போதும்
ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடு
மணவாளன் இயேசு வருகின்றார்
மகிழ்வுடனே சந்திக்கப் புறப்படு
அழிந்து போகும் மாந்தரை நினைத்திடு
அழியாத சுவிசேஷம் சொல்லிடு
உன்னதரின் சேவை செய்ய புறப்படு
பரலோகில் பலனுண்டு மகிழ்ந்திடு