Panivomey Naam

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்
தேவ பாலனை
தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம்
மேசியா இயேசுவைப் போற்றி
1. ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி
ஆர்ப்பரிப்போமின்று கூடி,
தீன பந்தா மெம் திவ்விய னேசுவை
தினமதில் துதிப்போம் கொண்டாடி – அக
2. தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்
ஈன வுருவ மெடுத்தார்
ஏவையின் பாவ வேரையறுத் தெமக்
கினிய இரட்சையுமளித்தார் – அக
3. பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!
மேலுலகோருக்கும் கோனே!
பாவிகள் மோட்சப் பதவியடைந்திட
தாவியிப் புவியில் வந்தாரே – அக
அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் பாடல் வரிகள், Agamagilnthadi Panivomae Naam Lyrics