Pani Pozhiyum Iravinile Christmas song lyrics

பனி பொழியும் இரவினிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே
வானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்தது
மாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலே
மாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது
அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்
அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2
இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலே
இனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே – பனி பொழியும்
1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே
பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே
மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2
வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் – அவர் விண்ணுலகம்
2.வானதூதரெல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே
மண்ணில் மாந்தரெல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே
மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2
வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் – அவர் விண்ணுலகம்