pamalai patituvoom saveriyare ungka

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே (2)
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு
கோயில்கட்டிக் கும்பிடுவோம் சவேரியாரே (2)
1. இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே -2
வாழியவே வாழியவே சவேரியாரே எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)
2. தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் – 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -2
வாழியவே வாழியவே சவேரியாரே எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே பாடல் வரிகள், Paamalai Paadiduvom Saveariyarae lyrics